Thursday, February 8, 2018

நெப்போலியன்

குழந்தைகளே!
நெப்போலியன் போனபார்ட் எப்போது பிறந்தான் 
என்று ஆசிரியர் கேட்டார்

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர்
என்றனர் குழந்தைகள்
நூறு வருடங்களுக்கு முன்னர் 
என்றனர் குழந்தைகள்
ஆனால் யாருமே அறிந்திருக்கவில்லை

குழந்தைகளே!
நெப்போலியன் போனபார்ட் என்ன செய்தான் 
என்று ஆசிரியர் கேட்டார்

ஒரு போரை வென்றான் 
என்றனர் பிள்ளைகள்
ஒரு போரைத் தோற்றான் 
என்றனர் பிள்ளைகள்
ஆனால் யாருமே அறிந்திருக்கவில்லை

அப்போது ப்ராண்டிசெக்
எங்கள் இறைச்சிக் கடைக்காரன் 
ஒரு நாயை வளர்த்து வந்தான்
அதன் பெயர் நெப்போலியன்என்றான்

இறைச்சிக் கடைக்காரன் 
அதைத் தொடர்ந்தும் அடிப்பான்
ஒரு வருடத்துக்கு முன் 
பசியாலேயே அது செத்துப்போனது
என்றான்

அனைத்துக் குழந்தைகளும் இப்பொது 
நெப்போலியனுக்காக வருந்தினார்கள்



மூலம்: மிராஸ்லாவ் ஹொலப் (செச் கவிஞர்)

தமிழில்: அசரீரி



வன்முறைகளாலும்அநியாயங்களாலும்சர்வாதிகாரத்தாலும் வரலாற்றுக்குள் இடம் பிடிக்கப் பார்க்கும் கொடுங்கோலர்களையும் மக்கள் விரோதிகளையும் அரசியல்வாதிகளையும் வரலாறு எவ்வாறு புறமொதுக்கும் என்பதற்கும்வரலாற்றைச் சுமக்கும் அடுத்த தலைமுறை எப்படி அலட்சியப்படுத்தும் என்பதற்கும் இந்தக் கவிதை மட்டுமே போதுமான சான்றாகும்

No comments: